2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொலிஸாரின் வேண்டுகோள்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 30 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

தனியார்  வகுப்புகளுக்கு வருகை தரும் மாணவர்களின்  கையடக்கத் தொலைபேசி பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை அபகரிக்கும் தம்பதிகள் கண்டி பொலிஸ்  தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதைக்கு அடிமையாகியுள்ளதாக கூறப்படும் தம்பதிகள், கண்டி வாவி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு வருகைத் தரும் மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்களைத் திருடி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

 இவ்வாறு இவர்களால் திருடப்பட்ட 8 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய 12 அலைபேசிகள், பல இடங்களில்  அடகு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் மாணவர்களை அச்சுறுத்தி அலைபேசிகள், பணம், பெறுமதியான கைக்கடிகாரங்கள் மற்றும் பெறுமதியான காலணிகள் போன்றவற்றையும் திருடிச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தம்பதியினால் அசௌகரியத்திற்கு உள்ளான மாணவர்கள் இருப்பின் அவர்களை  கண்டி பொலிஸ் தலைமையக குற்றப்பிரிவுக்கு வருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X