Editorial / 2024 பெப்ரவரி 25 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ஜோடி, ஐந்தரை வயது மதிக்கத்தக்க சிசுவை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கலஹா, லூல்கந்துர பிரதேசத்தில் உள்ள தோட்ட வீட்டில் விட்டுவிட்டே இவ்வாறு தலைமறைவாகிவிட்டனர்.
மட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில் இருந்து தற்காலிகமாக தங்குவதற்கு கலஹாவுக்கு வந்திருந்த இளம் ஜோடியே, சிசுவை கைவிட்டுச்சென்றுள்ளது.
இந்த இளம் ஜோடி, ஒரு கிழமைக்கு முன்னர், மற்றுமொரு பெண்ணின் உதவியுடன், கைக்குழந்தையுடன் இந்த தோட்டத்துக்கு தற்காலிகமாக வசிப்பதற்கு வந்துள்ளனர். அங்கிருந்து ரகசியமான முறையில் தப்பிச்சென்றுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அங்கிருந்த போது அடையாளம் கண்டுகொண்ட மற்றுமொரு நபருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்துள்ள அந்த ஜோடி, தாங்கள் இருவரும் வெளிநாட்டுக்குச் செல்வதாகவும், கைக்குழந்தை தாங்கள் தங்கியிருந்த வீட்டின் அறையில் இருப்பதாகவும், அதனை வளர்ப்பதற்கு யாரிடமாவது கொடுத்துவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சிசுவை மீட்ட பொலிஸார், அச்சிசுவை கலஹா வைத்தியசாலைக்குக் கொண்டுச்சென்றனர். அங்கு தாய்பால் ஊட்டுவதற்கு வசதிகள் இன்மையால், பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago