2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பால்மாவுக்காக கோபுரத்தில் ஏறியவர் கீழிறக்கப்பட்டார்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 05 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்

பொகவந்தலாவை- சென்மேரிஸ் தேசியகல்லூரிக்கு அருகிலுள்ள தொலைபேசி கோபுரத்தின் மீது ஏறி, நபர் ஒருவர் சுமார் மூன்று
மணித்தியாலங்களாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெத்த சம்பவம் நேற்று (4) இரவு  பதிவாகியது.

பொகவந்தலாவை- எல்டொப்ஸ் தோட்டத்தை சேர்ந்த ஒன்றை வயது பிள்ளையின் தந்தையான புகழ் என்பவரே, இந்த போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர், கீழிறக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர்,  கெம்பியன் பகுதியில் உள்ள வர்த்தக
நிலையமொன்றுக்கு தனது குழந்தைக்கு பால்மா வாங்கச் சென்றுள்ளார்.

 எனினும் பால்மா இல்லையென  வர்த்தக நிலைய உரிமையாளர் கூறியதால், பொகவந்தலாவை  நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பால்மாவை கோரியுள்ள போதும் அங்கும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே  குறித்த நபர், தொலைபேசி கோபுரத்தில் ஏறி ஆர்பாட்டத்தினை ஆரம்பித்தார்.

சம்பவத்தை அறிந்த பொகவந்தலாவை  பொலிஸார், 
ஒலிபெருக்கி ஊடாக குறித்த நபரை, கோபுரத்தில் இருந்து இறங்குமாறு
அறிவுறுத்தி, அந்நபரை பத்திரமாக கீழிறக்கியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X