2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

’பிரதேச சபைகளுக்கு வாகனங்களை பெற தீர்வையற்ற அனுமதிப்பத்திரம் வேண்டும்’

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதேச சபைகளுக்குச் சொந்தமான வாகனங்கள் இன்மையால், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு, தீர்வையற்ற அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, நோர்வூட் பிரதேச சபைத் தவிசாளர் கணபதி குழந்தைவேல் ரவி, மத்திய மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற வைத்தியசாலையில் திறப்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேயிடம், பிரதேச சபைத் தவிசாளரால், இது தொடர்பான கடிதமொன்று கையளிக்கப்பட்டள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தத் தவிசாளர்,

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஐந்து பிரதேச சபைகள் அமைக்கப்பட்ட போதிலும் அவை அனைத்தும், நிரந்தக் கட்டடம், வாகனம் இல்லாத நிலையிலேயே இயங்கி வருவதாகவும் இதனால், பிரதேச சபைக்கு பாரிய செலவுகள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, இதற்கு ஒரு தீர்வாக, வாகனம் அற்ற பிரதேச சபைகள் வாகனம் கொள்வனவு செய்வதற்கு, தீர்வையற்ற முறையில் வாகனம் கொள்வனவு செய்ய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் இதன்மூலம், மாதாந்தம் குறைந்த தவணைத் தொகையைச் செலுத்தி, பிற்காலத்தில், சொந்த வாகனமாக அதை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .