2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

புட்டிப்பால் அருந்திய பாலகன் பலி

R.Maheshwary   / 2023 ஜனவரி 09 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வயது பாலகன்  ஒருவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான்.

 நேற்று (8) காலை புட்டிப் பால் அருந்திக் கொண்டிருந்த இரண்டு வயதான  குறித்த பாலகன்,  மூச்சு திணறல் ஏற்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, உயிரிழந்துள்ளான்.

 பாலகனின்  உடல் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பாலகனின் தொண்டையில் பால் அடைத்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .