2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

புதிய அதிபருக்கு பெற்றோர் எதிர்ப்பு

R.Maheshwary   / 2023 ஜனவரி 04 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

மொனராகலை -விபுலானந்தா தமிழ் ஆரம்பப் பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிபருக்கு எதிராக, மொனராகலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று (04) பெற்றோர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொனராகலை- மரகலவத்தை ஸ்ரீ கௌரி வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியவர்  விபுலானந்த ஆரம்ப பாடசாலையின் புதிய  அதிபராக   நியமிக்கப்பட்டார்.

இரண்டாம் திகதி  இவர் தனது கடமைகளை பொறுப்பேற்கச் சென்ற போது, பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து பாடசாலைக்குச் சென்ற   மொனராகலை பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்  ம்.கே.ஹர்ஷனி சமீரா, குறித்த அதிபர் நேர்முகத்தேர்வின் மூலமே நியமிக்கப்பட்டதாகவும் அதனை இரத்துச் செய்ய முடியாதென்றும்   தெரிவித்துள்ளார்.

எனினும் இன்றைய தினம்  வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், புதிய அதிபர் பல முறைகேடுகள் மற்றும் ஊழல் வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

இதன்போது, சம்பவ இடத்திற்கு வந்த மொனராகலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் வலய அலுவலகத்தின் கதவுகளை மூடிவிட்டு அலுவலக வளாகத்திற்குள் செல்வதற்கு பெற்றோருக்கு  தடைவித்தனர்.

பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் பணி நிமித்தம் பதுளைக்கு சென்றுள்ளதாக அங்கிருந்தவர்கள்  தெரிவித்ததையடுத்து பெற்றோர்கள்  அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .