Editorial / 2024 மார்ச் 16 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சுதந்திர கட்சி ஆகியவை இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் உடன்படிக்கையை கொழும்பில் கைச்சாத்திட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு கொழும்பு பம்பலப்பிட்டி லூரிஸ் வீதியில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலையங்கத்தில் (15.03.2024) இடம்பெற்றதாக ஐக்கிய சுதந்திர கட்சி பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் தெரிவித்தார்.
இதன்போது இடம்பெற்ற கைச்சாத்து நிகழ்வில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் கங்காதரன் சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.
அதேபோல ஐக்கிய சுதந்திர கட்சி தலைவர் சோம் கோச் மற்றும் கட்சியின் பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் உள்ளிட்ட தேசிய சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு புதிய கூட்டணிக்கான உடன்படிக்கையை கைச்சாத்திட்டதாக சவேரியார் ஜேசுதாஸ் மேலும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பிரதேசத்தை தலமையகமாக கொண்டு செயற்படும் ஐக்கிய சுதந்திர கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து திசை காட்டி சின்னத்தில் தேர்தலில் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
11 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
1 hours ago
2 hours ago