R.Maheshwary / 2022 மார்ச் 07 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை வழங்குவதற்காக விசேட சொகுசு ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவையானது, போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில், நேற்று முன்தினம் ( 5) , கண்டியிலிருந்து எல்ல வரை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த ரயிலானது சுற்றுலா இடங்கள், மலைத்தொடர்கள் வரலாற்று சிறப்புமிக்க பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அதனை பார்வையிட கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் இச்சேவை, மாலை 2.20 மணியளவில் தெமோதர ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது. அதேப்போல் பிற்பகல் 3.40 மணிக்கு மீண்டும் தெமோதரயிலிருந்து புறப்படும் ரயில் இரவு 9.45 மணிக்கு கண்டி ரயில் நிலையத்தை வந்தடையும் என்றார்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026