2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம் மக்கள் பாதிப்பு

R.Maheshwary   / 2022 ஜூன் 09 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

பதுளை- ஸ்பிரிங்வெளி ஊடாக தெமோதர வரையான வீதி, காபட் இடப்பட்டு புனரமைப்பு செய்யும் பணிகள், கடந்த 3 வருடத்துக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் மக்கள் பெரிதும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன்கீழ், பதுளை- கிந்தகொட சர்வோதய மாவட்ட மத்திய நிலையத்துக்கு அருகில் உள்ள  மதகு உடைக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், இதனால் இந்த பகுதி விபத்துகள் இடம்பெறும் பகுதியாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் இந்த வீதியில் கவனமாக பயணிக்குமாறும்அறிவிப்பு பலகைகள் தொங்கவிடப்பட்டிருந்த நிலையில்,  இரவில் அந்த அறிவிப்பு பலகைகள் காட்சிப்படுத்தம் அளவுக்கு ஒளி விளக்குகள் பொருத்தப்படாமை காரணமாக  இப்பகுதியில் இரவில் விபத்துகள் பதிவாவதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X