2025 மே 17, சனிக்கிழமை

புலமைப்பரிசில் வினாத்தாள்கள் அனைவருக்கும் வழங்கப்படும்

Freelancer   / 2022 நவம்பர் 29 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் புலமைபரிசில்  பரீட்சை மாதிரி வினாத்தாள்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் செல்லமுத்து செல்வமதன் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், கொத்மலை பகுதியில் 40 தமிழ் பாடசாலைகள் உள்ளன. புலமைப் பரிசில் பரீட்சைக்கு 1,026    மாணவர்கள் தோற்றவிருக்கின்றனர். எனவே, அனைத்து மாணவர்களுக்கும் மாதிரி வினாத்தாள்களை கொத்மலை பிரதேச சபையூடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராரேஸ்வரன் ஆலோசனையில் 'கல்விக்கு கரம் கொடுப்போம்' என்ற அடிப்படையில் இத்திட்டம்  ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான அனுமதியை கொத்மலை பிரதேச சபை தலைவர் சுசந்த ஜயசுந்தர பிரதீப்குமார வழங்கியுள்ளார் என்றார். 
 
 இன்னும் ஒருசில தினங்களில் கொத்மலையில் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இலவச புலமைபரிசீல் மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு வழங்கப்படும் எனவும் செல்லமுத்து செல்வமதன் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .