2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

புளும்பீல்ட் தோட்டக் குடியிருப்பில் தீப்பரவல்

R.Maheshwary   / 2022 ஜனவரி 13 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி பண்டார

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கட்பட்ட பிரவுன்ஸ்வீக் தோட்டத்தின் புளும்பீல்ட் பிரிவில் உள்ள இரண்டு வீடுகளைக் கொண்ட குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

​இன்று (13) காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதுடன், இதனால் வீடொன்று பலத்த சேதமடைந்துள்ளது.

தீப்பரவல் ஏற்படும் போது, வீட்டில் எவரும் இருக்கவில்லை என்பதுடன், வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

மின் ஒழுக்கே இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், பொதுமக்களால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X