2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பூண்டுலோயாவில் கட்டாகாலிகள் தொல்லை

Freelancer   / 2023 ஜனவரி 13 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா நகரில் நாய்கள் அதிகரிப்பின் காரணமாக நகரத்துக்குச் செல்வோர் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை
ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பூண்டுலோயா நகரை பிரதான நகரமாக கொண்டு ஏறத்தாழ 20 க்கும் மேற்பட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் குப்பை கூழங்களில் இருந்தும் அதேபோல கடைகளால் அப்புறப்படுத்தப்பட்ட  குப்பைகளையும் ஏனைய கழிவுகளையும் கௌவி வந்து வீதிகள் முழுவதும் ஆங்காங்கே சிதறவிடுவதால் நகர் முழுவதும் அசுத்தமாகிய சூழல் காணப்படுவதோடு  துர்நாற்றம்  வீசுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நகரத்தை பொருத்தவரையில் 50க்கும் மேற்பட்ட கட்டாக்காலி நாய்கள் வீதியின் இருமருங்கிலும் மலம் கழித்து விடுவதால் நடப்பதற்கே அச்சப்படுகின்றனர்.

இரவு நேரங்களில் பஸ் தரிப்பிடத்திற்கு செல்லும் நாய்கள் ஒன்றாக சேர்ந்து மக்களை துரத்துவதும், கடிப்பதுமாக இருப்பதால் இரவில் பேருந்துக்குச் செல்ல மக்கள் பயப்படவேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது.

எனவே, கொத்மலை பிரதேச சபை இதற்கான உரிய தீர்வை வழங்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .