Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 25 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
2023ஆம் ஆண்டு எமக்கு மிக முக்கியமான ஆண்டாகும் எனத் தெரிவித்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடு அமைப்பு அமைச்சின் பிரஜா சக்தி பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி, 2023ஆம் ஆண்டு பெண்களின் பாதுகாப்பையும் அவர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிப்பதும் எமது இலக்காகும் என்றார்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் வரலாற்றுத் தடம் பதிக்கும் ஆண்டாகும். இந்நிலையில் பொருளாதார அபிவிருத்தியை மையமாகக் கொண்டு பல வேலை திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தெல்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மிகவும் பின் தங்கிய பெருந்தோட்ட மற்றும் கிராமப் பகுதிகளில் வாழும் பெண்களுக்கு சுகாதாரப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக பெண்கள் தங்களது குடும்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தங்களது சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகளை பிள்ளைகளுடைய கல்வியை மேற்கொள்ளவும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
எனவே 2023 ஆம் ஆண்டு தொழில் முனைவோருக்கான ஆண்டாக மாற்ற பல வேலை திட்டங்களை நாம் முன்னெடுக்க உள்ளோம்.
எமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியா வம்சாவளி மக்கள் பொருளாதார ரீதியில் பலமடைய பல வேலை திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செல்கின்றோம். பெண் தலைமைத்துவத்தை எதிர்வரும் தேர்தல்களில் பெண் பிரதிநிதிகளை அதிகரிப்பதற்கான விசேட திட்டங்களையும் நாம் உள்வாங்கியுள்ளோம் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .