2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பெண்கள் இருவர் ஆளுநருக்கு எதிராக முறைப்பாடு

R.Maheshwary   / 2023 ஜனவரி 05 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் சென்விரத்ன

மத்திய மாகாண ​ஆளுநர் தம்மைத் திட்டியதால் தாம் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்து குண்டசாலை பிரதேசசபையின் பெண் உறுப்பினர்கள் இருவர் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஆளுநரைச் சந்திப்பதற்காக நேற்று (4) மாலை 2 மணியளவில் அலுவலகத்துக்கு சென்ற போது, ஆளுநர் தம்மை திட்டியதாகவும் இதனால் தாம் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர்.

குண்டசாலை பிரதேசசபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான தீபிகா குமாரஹாமி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான பொடி மெனிகே அபேசிங்க ஆகியோரே இவ்வாறு ஆளுநருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் லலித்.யூ.கமகேயிடம் வினவியபோது, அவர்கள் குற்றஞ்சுமத்தும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை என தெரிவித்த அவர், குறித்த பெண் உறுப்பினர்கள் இருவரும் தன் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .