2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பெயர் நீக்க விவகாரம் : பொயிஸ்டன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து அகற்றப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் சூட்டுமாறு வலியுறுத்தி, நோர்வூட் பொயிஸ்டன் தோட்ட மக்களால் இன்றைய தினம் (14) காலை, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டமானது, பொயிஸ்டன் தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றது. இதில் 150ற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கலந்துகொண்டதுடன், எதிர்ப்புப் பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த தொழிற்பயிற்சி நிலையத்துக்கு, தொண்டமானின் பெயரை மீண்டும் சூட்டுவதற்கு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், பெயர் நீக்க நடவடிக்கையானது, அரசியல் ரீதியில் மலையகத்தில் வேறுபாடை உருவாக்கியுள்ளது. எனவே உடனடியாக அரசாங்கத் தலைமைகள் தலையீடு செய்து, இவ்விவகாரத்துக்கு தீர்வு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .