2025 மே 17, சனிக்கிழமை

பெருந்தோட்டப் பிள்ளைகளின் கல்வித் தரம் உயர்த்தப்படும்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

பெருந்தோட்டங்களில் வாழும் பிள்ளைகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு தேவையான மன மற்றும் உடல் மேம்பாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சிறுவர் மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை- கந்தேநுவர தம்பலகல பிரதேசத்தில் இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

தோட்ட மக்களின் பொருளாதார சமூகத்தை மேம்படுத்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக தோட்டங்களில் வாழும் இளைஞர்களுக்கு, நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் இளைஞர்களுக்கு வழங்குகின்ற உரிமைகளை அவர்களுக்கு வழங்குவதற்காக செயற்பட்டு வருகின்றது என்றார்.

தற்போது மாவட்டம் முழுவதும் புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்து வருகின்றோம். இதில் அதிகமாக தோட்டங்களில் வாழும் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றோம்.

மேலும் பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வைக்கவும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் செயற்படுவதாகத் தெரிவித்த அவர், மாத்தளை மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தலைமைத்துவத்தை ஏற்கவும் தான்  தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .