R.Maheshwary / 2022 மார்ச் 10 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் பெருதோட்டப் மக்களது பிரச்சினைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்துள்ள பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறை விரிவுரையாளும், மக்களுக்கான புத்திஜீவிகளின் கண்டி மாவட்ட ஒன்றியத்தின் செயலாளருமான கலாநிதி பாஸ்கரன், இதனை யாரும் கண்டுகொள்ளாதிருப்பது கவலையளிக்கிறது என்றார்.
நேற்று (9) கண்டி டெவோன் ஹோட்டலில் இடம் பெற்ற ஊடக சந்திப்பொன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
இன்று நாட்டில் அசாதாரண பொருளாதார பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் எரிவாயு இல்லை. எரிபொருள் இல்லை, மின்சாரம் இல்லை என்ற கோசங்களே அதிகம் உள்ளன. இவை பெரிதாகப் பேசப்பட்ட போதும் பெருந்தோட்டப் பிரதேச மக்களது பிரச்சினைகளை பொதுவாக யாரும் பெரிது படுத்துவதில்லை. ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பெருந்தோட்ட மக்களே அதிகம பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாதாரண காலத்திலே 1000 ரூபாய் வேதனம் கேட்டு அது கூட சுரண்டப்பட்ட நிலையில் இன்று அசாதாரண சூழலில் 1000 லும் குறைவான வேதனத்தால் என்ன செய்ய முடியும்? அவர்களது அவலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றார். ரஷ்ய- உக்ரேன் யுத்தம் காரணமாக இலங்கைத் தேயிலை ஏற்றுமதிக்கும் பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. இதுவும் எதிர்காலத்தில் தோட்டப்ப்பகுதிகளில் பாதிப்புக்ளை ஏற்படுத்தும் என்றார்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026