2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பேரனுடன் தங்கியிருந்த தாத்தாவின் மரணத்தில் சந்தேகம்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை இரண்டாம் கட்டை சமகிபுர பிரதேசத்தில் 20ஆம் திகதி இரவு திடீரென உயிரிழந்த 66 வயது முதியவரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதென பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் 66 வயது தாத்தாவுடன் 15 வயது பேரனும் தங்கியிருந்த நிலையிலே​யே இந்த மரணம் பதிவாகியுள்ளது.

முதியவரின் சடலம் மலர்சாலையிடம் ஒப்படைக்கப்பட்ட போது, முதியவரின் உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டதாக பதுளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவித்ததன் பின்னர், பதுளை நீதிவான் டபிள்யு.என்.டீ. சில்வா சடலத்தைப் பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனை அறிக்கையும் சமர்ப்பிக்குமாறு பதுளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த முதியவருடன் தங்கியிருக்கும் சிறுவன் தனியார் பாடசாலையொன்றில் கல்வி கற்று வருவதுடன்  அவரது தந்தை வெளிநாட்டிலும் தாய் நீர்கொழும்பு பிரதேசத்திலும் வசித்து வருகின்றமை தெரியவந்துள்ளது.

அத்துடன் விடுமுறையைக் கழிப்பதற்காக தாத்தாவின் வீட்டுக்கு சிறுவன் வந்துள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X