2025 மே 05, திங்கட்கிழமை

பொகவந்தலாவையில் மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

Editorial   / 2021 மே 27 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

சுயதனிமை பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள பொகவந்தலாவ பகுதியில், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவேறு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை நேற்று (26)   பொகவந்தலவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொகந்தலாவை- சிரிபுர பகுதியில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த 83மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன்,   டின்சின் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்ற 20 மதுபான போத்தல்களுடன் ஒருவரையும் பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுயதனிமை விதிமுறையை மீறி சட்ட விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட இருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X