R.Maheshwary / 2022 மே 02 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொய்யான தேர்தல் வாக்குறுதிகளால் எம் மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், தேர்தல் மேடைகளில் காடு மலை ஏறி வாக்குறுதிகளை அள்ளி இரைத்த ஒரு சில அரசியல்வாதிகள் இன்று மௌனம் காக்கிறார்கள் என்றார்.
நேற்று (1) கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
ஆயிரம் ரூபாய் வேதனம் என்பது எட்டாக்கனியாகவே இன்றளவும் காணப்படுகின்றது. காலையிலிருந்து சிரமத்திற்கு மத்தியில் கொழுந்து கூடைகளை முதுகில் சுமந்தபடி, தொழில் புரிந்து மாலையில் பால்மாவுக்கும் எரிவாயுக்கும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமை மாற வேண்டும். மலையக மக்களுக்கு பிரஜா உரிமையை பெற்றுக் கொடுத்த ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாசவால் மட்டுமே மலையக மக்களின் உரிமைகளையும் மீட்டெடுக்க முடியும்.
மலையக மக்களின் காணி உரிமை, வீட்டு உரிமை, தொழில் பாதுகாப்பு தொடர்பில் தானும் சஜித் பிரேமதாசவும் எமது ஆட்சியில் பல புதிய திட்டங்களை நடைமுறைப் படுத்துவோம். மலையக மக்களின் உரிமைக்குரல் ஐக்கிய மக்கள் சக்தியே என்றும் தெரிவித்தார்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்புகளாக செயல்பட்டுவந்த பெருந்தோட்ட மக்கள் இன்று வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள் சுதந்திரமான ஒரு மே தினக் கொண்டாட்டத்தை இன்றைய நாளில் நாம் கொண்டாட முடியவில்லை என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அவர்கள்
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago