2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

பொருளாதார மத்திய நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் மரக்கறிகள்

R.Maheshwary   / 2022 மே 11 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார

ஊரடங்கு உத்தரவால் தம்புளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இரண்டொரு தினங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து கொண்டு வரப்பட்ட மரக்கறிகள் லொறிகளிலிருந்து இறக்கப்படாமல், தம்புளை பொருளாதார மத்தியநிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நேற்றைய தினம் தம்புளை, நாவுல, கலேவல, சீகிரியா உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடியிருந்தன.

பிரதான வீதிகளில் அத்தியாவசிய சேவை வாகனங்கள் மாத்திரம் பயணித்ததுடன், பொலிஸார் குறித்த வாகனங்களை கடுமையாக சோதனைக்குட்படுத்தி வந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X