2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பொலித்தீன் பாவனை இன்றி தேர்தலை நடத்தத் தீர்மானம்

Editorial   / 2017 நவம்பர் 09 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

எதிர்வரும் தேர்தலின்போது கேகாலை மாவட்டத்தில் பொலித்தீன் பாவனை இன்றி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், இன்று(9) சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தலைமையில்,  கேகாலை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்போது கருத்த தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய,

'பொலித்தீன் பாவனையால் நுளம்பு பெருகி வருகிறது. இதன் காரணத்தினாலேயே தேர்தல் காலங்களில் பொலித்தீன் பாவனையை முற்றாகத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எனவே, எதிர்வரும் தேர்தலின்போது கேகாலை மாவட்டத்தில் பொலித்தீன் பாவனை இன்றி விளம்பரங்களை நடாத்துவதற்கு, அனைவராலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.

மேற்படி கூட்டத்தில் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய துசிதா விஜயமான, சுஜித் சஞ்ஜய பெரேரா, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, கேகாலை மாவட்ட செயலாளர் சந்திரசிறி பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .