Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
“நுவரெலியா மாவட்டத்தில், இரவு நேரங்களில் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை முறையாக அமுல்படுத்துவதற்குப் பொறுப்பு வாய்ந்த தரப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் (25) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“நுவரெலியா மாவட்டத்தில், குறுந்தூர பயணிகள் பஸ் சேவைகள் இரவு 7 மணிக்குப் பிறகு மட்டுப்படுத்தப்படுவதால், பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுவரெலியா- ஹட்டன் , டயகம – தலவாக்கலை போன்ற பாதையூடான இரவு சேவைகள முற்றாக இடம் பெறுவதில்லை” என சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago