2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

போதைப் பொருள் தேடி கண்டிக்கு வந்த இளைஞர்கள் கைது

R.Maheshwary   / 2022 மார்ச் 20 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் மூவர், போதைப் பொருளைத் தேடி, அநுராதபுரத்திலிருந்து கண்டிக்கு வந்த போது, கண்டி  பொலிஸ் தலைமையக போதை ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருளைத் தேடி, ஓட்டோவில் வருகைத் தந்த குறித்த மூன்று இளைஞர்களும் கண்டி நகரில் சுற்றித் திரிந்த போதே, கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது அவர்களிடமிருந்து போதைப் பொருள் பக்கட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் இவர்கள் போதைப் பொருளைத் தேடியே கண்டிக்கு வருகைத் தந்துள்ளமை, சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், 3 சந்தேகநபர்களில் ஒருவருக்கு எதிராக அநுராதபுர நீதிமன்றில் 4 பிடியாணைகளும் மற்றொரு இளைஞருக்கு எதிராக ஒரு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X