2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போதையில் மிதந்து மரணித்த ‘முதிய ஜோடி’

Editorial   / 2022 ஒக்டோபர் 27 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வயது முதிர்ந்த கணவனும், மனைவியும் மதுவுக்கு அடிமையான நிலையில், மது போதையில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மரணமாகியுள்ள சம்பவமொன்று பதுளை வைக்கும்பர பெருந்தோட்டத்தில், 26 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்விருவருக்கும் மகளும், மகனும் உள்ளனர். திருமணம் முடித்து குடும்பத்தைவிட்டு பிரித்து மகன் வாழ்கின்றார். மத்திய கிழக்கு நாடொன்றில் மகள் தொழில் செய்து வருகின்றார். இவர் பெற்றோருக்கு அனுப்பும் பணத்தில் இவ்விருவரும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர்.

இவ்விருவரும் கூடுதலாக மது அருந்தியதால் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனர். அயலவர்கள் இவர்களை படல்கும்புரை அரசினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இவ்விருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், இவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

எம். செல்வராஜா        

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X