R.Maheshwary / 2022 மே 08 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
போலி வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேகநபரிடமிருந்து 20 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கண்டி மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரின் இறப்பர் முத்திரையை ஒத்த போலி இறப்பர் முத்திரை, ஆவணங்கள் உள்ளிட்ட பொருள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு போலியாக தயாரிக்கப்படும் அனுமதிப்பத்திரம் ஒன்று 20,000- 25,000 ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டு வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேகநபருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கண்டி மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சிலர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago