Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 நவம்பர் 03 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாளுடன் இராணுவ சிப்பாயொருவர் தியத்தலாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நாணயத்தாளை வழங்கி, தியத்தலாவை நகரிலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் மதுபானத்தைக் கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளார்.
இதன்போது இந்த நாணயத்தாள் தொடர்பில் சந்தேகம் கொண்ட மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளர், அது குறித்து தியத்தலாவை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து தியத்தலாவை பொலிஸார் அந்த நாணயத்தாளை பரிசோதித்த போது, அது போலியானதென்று தெரியவந்த நிலையில், சந்தேகநபரை கைதுசெய்து விசாரித்துள்ளனர்.
இதன்போது, இராணுவ பயிற்சிப் பாடசாலையின் கணினியைப் பயன்படுத்தி இரண்டு ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களைத் தான் பெற்றுக்கொண்டதாகவும் இச் செயல்பாடுகளுக்கு மேலும் மூன்று இராணுவ பயிற்றுனர்கள் உடந்தையாக இருந்ததாகவும் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் கூறியுள்ளார்.
இதனையடுத்து மூன்று இராணுவ பயிற்றுனர்கள் கணினித் தொகுதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தியாத்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர தயாரட்ண கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .