2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

போலி பெறுபேறு தாள் தயாரித்தவர்கள் கைது

Simrith   / 2023 நவம்பர் 29 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுத் தாள்களைப் போன்று போலியான பரீட்சை பெறுபேற்றுத் தாள்களை தயாரித்த நான்கு சந்தேகநபர்கள் கேகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சோதனையில் போலி தேர்வுத் தாள்களை உருவாக்கிய ஒருவரும், அவருக்கு உதவிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். 

சந்தேகநபர்கள் 21 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் ஹக்கஹின்ன, ஹெட்டிமுல்ல மற்றும் அலபலவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சோதனையின் போது போலி பெறுபேற்றுத் தாள்கள், கணினி, மற்றும் செப்பு சீல் ஆகியவை உட்பட பல பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X