Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா- ப்ரௌன்ஸ்வீக் தேயிலை தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (29) இரவு பாரியளவு தேயிலைத் தூள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தோட்ட முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார தெரிவித்தார்.
இதனையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கடமையில் புரியும் காவலாளிகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோரிடம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
எனினும், இதுவரை சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணை நடைபெற வில்லை எனத் தெரிவித்து, அத்தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் பணி பகிஸ்கரிப்பு ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago