Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 29 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள், மக்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி .லால்காந்த தெரிவித்தார்.
கொத்மலை தேர்தல் தொகுதியின் மக்கள் சந்திப்பு கூட்டம் கொத்மலை – பூண்டுலோயா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது.
இதில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டை விட்டோடிய பசில் ராஜபக்ஷ, அண்மையில் நாடு திரும்பினார். பலமான அரசியல் இயக்கத்தை அவர் உருவாக்கபோவதாக சிலர் கூறித்திரிகின்றனர். விமான நிலையம் வந்த பசிலுக்கு அவரின் சகாக்கள் மற்றும் அடியாட்களால் அரச அனுசரணையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
ஆனால், தான் நாட்டைவிட்டு செல்ல முற்படுகையில் விமான நிலைய ஊழியர்கள் எப்படி கவனித்தார்கள் என்பதை பசில் ராஜபக்ஷ மறந்துவிடக்கூடாது. மக்கள் போராட்டம் இன்னமும் ஓயவில்லை. அத்துடன் மக்களின் கோரிக்கைகள் அவ்வாறே உள்ளன என்றார்.
கொள்ளையர்கள், பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் ,கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர். இதையும் பசில் உள்ளிட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அதேவேளை, ஹிட்லர் பற்றி கதைப்பதற்கு முன்னர் 'காற்சட்டை'யை எப்படி சரியாக அணிவது என்பதை ரணில் புரிந்துகொள்ள வேண்டும்." - என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
6 hours ago
6 hours ago