2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டி ​வேன் விபத்தில்;ஒருவர் பலி

R.Tharaniya   / 2025 நவம்பர் 18 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் ஹட்டனில் இருந்து பொல்பிட்டிய வக்கம நோக்கிச் சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியதில் திங்கட்கிழமை (17) அன்று விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் உயிரிழந்ததாக பொல்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி உப்பு குமார தெரிவித்தார்.

உயிரிழந்த நபர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 53 வயதான எச்.எம். இந்திக பிரியகுமார ஆவார். 

அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வேனுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும், வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும் பொல்பிட்டிய  பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஓட்டுநரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X