R.Maheshwary / 2023 பெப்ரவரி 09 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
இன்றைய தினம் (9) மடுல்சீமை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, இன்று பகல் 12.30 மணிவரை சஜித்தின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில், பகல் 12.30 மணியளவில் மேடையேறிய ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியதுடன், இந்த பிரசாரத்துக்கு வருகைத் தந்த எதிர்கட்சித் தலைவர் பசறை- கெக்கிரிவத்த பகுதியில் வைத்து திடீர் சுகயீனமடைந்து கொழும்பு திரும்பிவிட்டதாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் தாம் ஒரு நாள் சம்பளமான 1,000 ரூபாயை இழந்து இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட போதிலும் எதிர்கட்சித் தலைவர் தம்மை ஏமாற்றிவிட்டதாக கூச்சலிட்டுள்ளனர். இந்த கூட்டத்துக்கு வருகைத் தந்தவர்களுள் பெரும்பாலானவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
6 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Jan 2026