Janu / 2026 ஏப்ரல் 23 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மலைநாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் ஒன்றான மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளமையினால், குறித்த நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கியிருந்த பழைய மஸ்கெலியா நகரத்தின் சிதைவுகள் மீண்டும் தென்பட தொடங்கியுள்ளன.
நீர்மட்டம் குறைந்ததை தொடர்ந்து, நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கியிருந்த பழைய இந்து கோவில், புத்தர் சிலை, போதி மரத்தின் அடிப்பகுதி மற்றும் பழைய பாலம் என்பன இவ்வாறு தென்படுகின்றன.
இப்பிரதேசத்தில் மாலை வேளைகளில் மழை பெய்த போதிலும், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வதற்கு அது போதுமானதாக இல்லை என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுதத் எச். எம். ஹேவா







13 minute ago
15 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
29 minute ago