2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மணிக்கட்​டி தோட்டத்தில் ஒருவர் அடித்துக் கொலை

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 25 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மணிக்கட்டி தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

38 வயது இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராஷேந்திரன் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு  அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

லெவலன் தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்று, மணிக்கட்டி தோட்டத்தில் இருக்கும் உணவகம் ஒன்றுக்கு கொத்து ரொட்டி வாங்குவதற்கு வருகை தந்துள்ளனர்,

இதன்போது இரு இளைஞர் குழுக்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அடிதடியில் முடிந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய, 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபர்களை அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புப்புரஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மனோ ரஞ்சித் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X