2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

மண்சரிவால் வீதிக்கு வந்த சமையலறை

Janu   / 2023 நவம்பர் 20 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - பன்விலை ஆத்தளை பிரதேசத்தில் சனிக்கிழமை (18)  மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடொன்றின் சமையலறைப் பகுதி வீதிக்கு வந்துள்ளது.

மண்சரிவினால் விட்டிலுள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் மண்சரிவு காரணமாக வத்தகேம பகுதியிலிருந்து கபரகலை பெத்தேகம, கோமரை, பம்பரல்லை பகுதிகளுக்கான போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வீதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்த வண்ணமுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மெய்யன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X