2025 மே 08, வியாழக்கிழமை

மண்சரிவில் சிக்குண்ட 4 பேரும் சடலங்களாக மீட்பு

Editorial   / 2021 ஜூன் 05 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுமையான மழையை அடுத்து, நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வீடொன்றின் மீது மண்மேடு, சரிந்து விழுந்ததிலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளைகள் இருவர் காணாமல் போயிருந்தனர்.

மண் மேட்டில் சிக்கியிருந்த தந்தை (வயது 57), தாய் (53 வயது), மகன் (வயது 34) ஆகியோர். இன்று பிற்பகலில் மீட்கப்பட்டனர். 27 வயதான மகளுடைய சடலம், இன்றுக்காலை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X