Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
மு.இராமச்சந்திரன் / 2018 மே 27 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுன்ட்ஜீன் தோட்டத்தில் லயன் குடியிருப்பு அருகில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தக்குடியிருப்பைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் தற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ளனர்.
மவுன்ட்ஜீன் தோட்டத்தின் 7 ஆம் இலக்க லயன்குடியிருப்புக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு அபாயத்தினால் இந்தக்குடியிருப்பைச் சேர்ந்தவர்களின் பெரியவர்கள் தோட்ட தேயிலைத் தொழிற்சாலையிலும் சிறுவர்கள் வட்டவளை வைத்தியசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஊடாக உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மவுண்ட்ஜீன் தோட்டத்துக்குச் சென்று தேயிலைத் தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டவர்களைச் சந்தித்துள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எதிர்காலத்தில் தனி வீடுகளைக் கட்டிக்கொடுப்பது தொடர்பாக அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏனைய உதவிகளை வழங்கவதற்கு சமூக நிறுவனங்கள் முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .