Ilango Bharathy / 2021 ஜூன் 15 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். மஹிந்தகுமார்
மண்சரிவு ஏற்படுமென தேசிய கட்டட ஆய்வு நிலையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள,
குடியிருப்புகளிலேயே, இரத்தினபுரி வேவல்கெட்டிய தோட்ட மக்கள் வாழும் அவல நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தின் ஹப்புகஸ்தென்ன, வேவல்கெட்டிய தோட்ட கீழ் பிரிவில் வசிக்கும்
சுமார் 42 குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதால், அவர்களை அங்கிருந்து
வெளியேறுமாறு, தேசிய கட்ட்ட ஆய்வு நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

2016ஆம் ஆண்டிலிருந்து 42 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் மண்சரிவை எதிர்நோக்கி வரும்
நிலையில், அவ்வப்போது இம்மக்கள் தமது உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள தற்காலிய
இடங்களில் தங்குவதுடன், மழைக் காலம் நின்ற பின்னர், மீண்டும் பழைய குடியிருப்புகளுக்கே
வந்து விடுகின்றனர்.
கடந்த 5 வருடங்களாக இவ்வாறான பிரச்சினையை தொடர்ந்து சந்தித்து வரும் இம்மக்கள்,
தமக்கு நிரந்தமான வீடுகளை அமைக்க இடமொன்றை ஒதுக்கித் தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இவர்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, தமக்கான நிரந்தர இடமொன்று கிடைக்கும் வரை பாரிய வெடிப்புகளுக்கு மத்தியில்
உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்வதைத் தவிர வேற வழியில்லை என்றும் இம்மக்கள்
தெரிவிக்கின்றனர்.
12 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago