2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

மண்ணெண்ணெய் கேட்டு இரவில் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 ஜூன் 06 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். யோகா

மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள 30 மணித்தியாலயங்களுக்கு மேல் வரிசையில் நின்ற பொதுமக்கள், பொறுமையை இழந்து கம்பளை- கண்டி வீதியில்  டயர்களை எரித்து, நேற்று (5)  இரவு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு, சுமார் ஒரு மாதத்துக்குப் பின்னர் மண்ணெண்ணெய்  கொண்டுவரப்பட்டமையால் சுமார் ஐயாயிரம் பேர் வரை, நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதன் போது மண்ணெண்ணெய் விநியோகம் இடையில் நிறுத்தப்பட்டமையையடுத்தே, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பின்னர் கம்பளை பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் கலந்துரையாடி, இரவு 11.30.மணிக்கு மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X