R.Maheshwary / 2022 ஜூன் 22 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
மண்ணெண்ணெய் பிரச்சினையால் தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வொன்றை வழங்குமாறு தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானால், எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடித த்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது மலையக மக்கள், தமது அன்றாட பாவனைக்கு மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது மண்ணெண்ணெய்க்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலையக மக்கள், தமது அன்றாட வீட்டுத் தேவை உள்ளிட்ட தேவைகளுக்கு மண்ணென்ணெய் மற்றும் சமையல் எரிவாயுக்கு ஈடுப்படுத்தி கொண்டுள்ளனர்.
தற்போது இவை இரண்டுக்கும் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், தொழிலாளர்கள் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவ்வப்போது கிடைக்கும் மண்ணெண்ணெய்க்கும் ,முகவர் நிலையங்களில் கிடைக்கும் சமையல் எரிவாயுக்கும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் தமது அன்றாட தொழிலில் கிடைக்கும் ஒரு நாள் அல்லது அதற்கு மேலாக வருமானத்தை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, இதை ஒரு சிறப்புச் சூழ்நிலையாகக் கருதி, மண்ணெண்ணெய் தொடர்ந்து கிடைப்பதைத் உறுதிபடுத்தி, நாட்டின் வெளிநாட்டு வருவாயை நேரடியாகப் பெறுவோரின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என அக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் எழுதிய கடிதத்துக்கு அமைச்சர் காஞ்சனா விஜயசேகர பதில் அளித்துள்ளார் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

19 minute ago
30 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
55 minute ago
1 hours ago