2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி

R.Maheshwary   / 2022 ஜனவரி 24 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னக்கும்ப-ர தெக்வத்த பிர​தேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததால் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 58 வயதுடையவர் என பொலிஸார் ​தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (23) தனது வீட்டுக்கு செல்லும் பாதையை துப்புரவு செய்துகொண்டிருந்த போது, மேலே இருந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து பிரதேசவாசிகள் நபரை மீட்கும் போதே, அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X