Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 30 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்கொண்டு வருவதற்கான அனுமதியை வழங்காவிடின் வீதியில் இறங்கி போராடுவோமென கண்டி மாவட்டத்தில் செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டி மாவட்டத்திலுள்ள பாத்தத்தும்பர, ஹரிஸ்பத்துவ, செங்கடகல, கலகெதர ஆகிய பகுதிகளில் செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு, மண் கொண்டு வருவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமையால், அவர்கள் தமது தொழிலை கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால் ,த்தொழிலை நம்பியிருக்கும் 2,000ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'செங்கல் உற்பத்தி செய்வதற்கு தேவையான மண்ணை, வீடுகளுக்காக அத்திபாரம் வெட்டும் போது அதிலிருந்து பெற்றுக் கொள்கின்றோம். அம் மண்ணை லொறி மூலம் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' எனவே ,து தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்' என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதேச செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago