Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 28 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
புளத்கொஹுபிட்டிய – களுப்பஹன தோட்டத்தில், கடந்த ஆண்டு ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, இதுவரை எவ்வித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை என, லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“மேற்படித் தோட்டத்தில், கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட மண்சரிவில், 17 பேர் உயிரிழந்ததுடன் பலர் வீடுகளை இழந்தனர். அனர்த்தம் ஏற்பட்டு, ஒருவருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அதே இடங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்..
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டபோதும், அந்தப் பணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இது குறித்து தோட்ட நிர்வாகமும் அக்கறைக் கொண்டதாக தெரியவில்லை.
அதேபோல், அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எவ்விதமான நிவாரண உதவிகளும் இதுவரை வழங்கப்படவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
7 minute ago
23 minute ago
25 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
25 minute ago
51 minute ago