Mayu / 2026 ஏப்ரல் 08 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனித பூமியான சிவனடிப்பாத மலைக்குச் செல்லும் யாத்ரீகர்கள் பொறுப்பற்ற முறையில் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளால், இப்பகுதியின் இயற்கை எழில் மற்றும் சுற்றுச்சூழல் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

2025/2026 யாத்திரிக பருவகாலம் ஆரம்பமாகி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக இம்முறை யாத்ரீகர்களின் வருகை முன்னைய காலங்களை விடக் குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும், வருகை தந்த ஒரு சில யாத்ரீகர்களும் நல்லதண்ணி நகரில் இருந்து மலை உச்சி வரையிலான பாதையின் இருபுறங்களிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் பாரியளவில் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத கழிவுகளைக் கொட்டிச் சென்றுள்ளனர்.
"நமது மூதாதையர்கள் நமக்காகப் பாதுகாத்து விட்டுச் சென்ற இந்தப் புனித இடங்களை, நாம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்" என்ற பொறுப்புணர்வு பலரிடையே அற்றுப்போயுள்ளதை இக்காட்சிகள் உணர்த்துகின்றன. புனித யாத்திரை என்பது இறைவனை வணங்குவதுடன் மாத்திரமன்றி, இயற்கையைப் பாதுகாப்பதையும் உள்ளடக்கியது என்பதை யாத்ரீகர்கள் உணரத் தவறியுள்ளனர்.
இதற்கமைய, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் பின்வரும் முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்:
21 minute ago
23 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
23 minute ago
53 minute ago