Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2017 நவம்பர் 17 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாணத்தில், டெங்குக் காய்ச்சல் பரவுவதை கட்டுப்பாட்டுகுள் கொண்டு வருவதற்கு, விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக, மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சாந்தி சமரசிங்க தெரிவித்தார்.
மத்திய மாகாணத்தில் தற்போது டெங்கு நோயின் நிலைமை தொடர்பில் வினவியபோது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கூறிய அவர்,
“மத்திய மாகாணத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை, 16,548 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 12,947 நோயளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 2,759 நோயளர்களும், நுரெலியா மாவட்டத்தில் 842 நோயளர்களும் பதிவாகி உள்ளனர்.
கடந்த வருடங்களில் மத்திய மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருந்தபோதும், 2017ஆம் ஆண்டு அத்தொகை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதற்கு, நாடு முழுவதிலும் ஏற்பட்ட நிலமைக்கு ஏற்றவாறு மத்திய மாகாணத்திலும் டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவியது.
இருந்தபோதும் 2018ஆம் ஆண்டில் மத்திய மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படாத வகையிலும், டெங்குத் தொற்று பரவாமல் இருப்பதற்கும் விஷேடத் திட்டமொன்றை தற்போது முதல் நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago