2025 மே 05, திங்கட்கிழமை

மத்திய மாகாணத்தில் மேலும் மூன்று தொற்றாளர்கள்

Gavitha   / 2020 நவம்பர் 16 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாணத்தில் நேற்று (15) மேலும் மூன்று கொரோனா ரைவஸ் தொற்றாளர்கள இனங்காணப்பட்டுள்ள நிலையில், தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை, இன்றுடன் (16) 186ஆக உயர்வடைந்துள்ளது என, மத்திய மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி  மாவட்டத்தில் 89 வைரஸ் தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 37 வைரஸ் தொற்றாளர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 60 வைரஸ் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில், அக்குறைணை 13, தொலுவை, 07, கலகெதர 07, கலஹா 06, கம்பளை 08, கங்கஇஹல கோரலய 05, கங்கவட்ட கோரலய 03, ஹரிஸ்பத்துவ 03, குண்டசாலை 06, கண்டி நகரசபை பிரிவு 02, மினிபு 01, மெததும்பளை 12, பாத்ததும்பறை 02, பாத்தஹேவாஹெட 08, பூஜாபிட்டிய 02, உடுநுவர 02, யடிநுவர 03 என்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில், அம்பகமுவ 17, பகவன்தலாவ 06, ஹங்குரன்கெத்த 01, கொடகல 08, கொத்மலை 02, லிந்துலை 01, மதுரட்ட 02, மஸ்கெலியா 16, நவ திஸ்பனை 04, நுவரெலியா 01, வலப்பனை 02 என்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X