2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மது போதையில் வாகனம் செலுத்திய மாணவர்களுக்கு அபராதம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 21 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா                                   

மதுபோதையில் வாகனம்; செலுத்திய குற்றச்சாட்டில், லுணுகலையில் வைத்துக் கைதான பாடசாலை மாணவர்கள் மூவருக்கும் 51 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் ருவந்திகா மாரசிங்க, இன்று (21) உத்தரவிட்டுள்ளதுடன் அவர்களது சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரண்டு வருடங்களுக்குத் தடைசெய்யுமாறு பணித்துள்ளார்.

லுணுகலையிலுள்ள பாடசாலையொன்றில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் மேற்படி மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமை (19) மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தியுள்ளனர்.

இவர்கள் பயணித்த வாகனத்தை மறித்து சோதனை செய்த லுணுகலை பொலிஸார், வாகனத்தைச் செலுத்தி வந்த மாணவன் உட்பட ஏனைய இருவரும் மதுபோதையில் இருந்ததைக் கண்டு அவர்களைக் கைதுசெய்துள்ளதுடன் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்படி மூவரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்படி மூவருக்கும் தலா 17 ஆயிரம் ரூபாயை அபராதமாகச் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .