2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மனைவியின் உள்ளாடையை துவைக்க சொன்னதால் பொங்கி எழுந்த மக்கள்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 03 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

செனன் தோட்டமுகாமையாளரின்  மனைவியுடைய உள்ளாடையை துவைக்க மறுத்த தோட்ட தொழிலாளியை, கொச்சை வார்த்தையால் திட்டிய முகாமையாளருக்கு எதிராக செனன் மக்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஹட்டன் பிளான்ட்டேஷன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் செனன் தோட்ட தோட்டதொழிலாளர்களே நேற்று (2)  முகாமையாளருக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தோட்ட பங்களாவில் காவல் வேலை செய்யும் தோட்ட தொழிலாளி ஒருவரை, முகாமையாளர் தன் மனைவியின் உள்ளாடையை துவைக்க சொன்னதாகவும் அதை மறுத்ததினால் கொச்சை வார்த்தைகளால் திட்டியதாகவும் தொழிலாளி  கூற, அதனால் ஒட்டு மொத்த செனன் தோட்ட தொழிலாளர்களும் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கையில், முகாமையாளரும் அவரோடு தோட்டத்தில் வேலை செய்யும் இரு கணக்குபிள்ளையும் இடமாற்றம் செய்ய வேண்டும். காரணம் இம்மூவரும் தோட்டத்தொழிலாளர்களை அடிமை போல நடத்தி வருகின்றனர்

. தொழிற்சங்கங்களுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளோம்.இதற்கு நிரந்த தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்க நேரிடும் என குறிப்பிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X