2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

மனைவியுடன்கோபம்: விஷம் கொடுத்து குடித்த கணவன்

Editorial   / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவ்வளவு எடுத்துரைத்தும் தன்னுடைய மனைவி, தனக்கு சொல்லாமல், கொழும்புக்குச் சென்றதை அடுத்து கடும் கோபமடைந்த அவருடைய கணவன், தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் உணவில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு, தானும் விஷ உணவை உண்ட சம்பவம் கம்பளையில் இடம்பெற்றுள்ளது.

விஷம் கலந்த உணவை உட்கொண்ட மூவரும் அசாதாரண நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூண்டுலோயா ஹெரொஹ்ட் பகுதியிலேயே இச்சம்வம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அம் மூவரையும் மீட்ட பொலிஸார், அவர்களை கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X