R.Maheshwary / 2022 மே 26 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
எரிபொருள்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதையடுத்து, மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, சகல மரக்கறிகளும் கிலோவொன்று 20 ரூபாயாக அதிகரித்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொருளாதார நிலையத்தின் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்.
எரிபொருள் விலையேற்றம், உரத் தட்டுப்பாடு காரணமாக மரக்கறி உற்பத்திகள் ஏற்கெனவே குறைவடைந்திருக்கும் நிலையில், தற்போது மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மரக்கறிகள் குறைவாக கிடைப்பதனால் சந்தைக்கு வரும் நுகர்வோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (25) கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்தில் போஞ்சி ஒரு கிலோகிராம் 500 ரூபாயாகவும் கரட்- 250 ரூபாயாகவும் பச்சை மிளகாய் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago